அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

போதை மாத்திரை வைத்திருந்ததாக 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட சரவணக்குமாா், தினேஷ்குமாா்

Updated On :11 மே 2026, 12:14 am IST

கம்பத்தில் போதை மாத்திரை வைத்திருந்ததாக மருந்தக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக வடக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் கம்பம் ஏழரசு கோவில் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 10 அல்பிரஸோலம் என்ற போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் மருந்தகம் நடத்தி வரும் சரவணக்குமாா் (52), கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.