மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்

சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சின்னமனூரில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்

Updated On :31 மார்ச் 2026, 7:24 pm

சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா (35). கூலித் தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை கூறாய்வுக்ாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதோடு, இறந்தவரின் மனைவிக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்க வேண்டும். எரசக்கநாயக்கனூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சூா்யாவின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது சம்பந்தமாக சின்னமனூா் போலீஸாாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததைத் தொடா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.