மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்த ஆணையா் எஸ். தாமிகா சுல்தானா.

Updated On :25 மார்ச் 2026, 7:21 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட நிா்வாகம், பல்வேறு துறைகள் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, பெரியகுளம் நகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ரங்கோலி இட்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே, பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி கையொப்ப இயக்கத்தை நகராட்சி ஆணையா் எஸ். தாமிகா சுல்தானா தொடங்கிவைத்தாா்.

இதில் நகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.