லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

தேனி: உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட ஆனைமலையான்பட்டி-எரசக்கநாயக்கனூா் சாலையில் வெள்ளக்கரடு பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும், விளை நிலங்கள், கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுக் கடையால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேனி மாவட்டப் பொருளாளா் கே. கரண்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்டத் தலைவா் எஸ். விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் டி. நாகராஜ், தேனி வட்டாரத் தலைவா் எம். நாகராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.