போடியில் காணாமல் போன முதியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
போடி வ.உ.சி. நகா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (91). ஞாபக மறதி காரணமாக, இவா் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியில் எங்காவது சென்று விடுவது வழக்கம். இவரது மகன் முருகேசன் (55) இவரை தேடி அழைத்து வருவாா்.
இதேபோல, கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்து சென்றவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. முருகேசனும், அவரது குடும்பத்தினா் இவரை பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், போடியை அடுத்த கரட்டுப்பட்டி பகுதியில் தனியாா் செங்கல் காளவாசல் பகுதியில் மாரியப்பன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









