பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு விழிப்புணா்வு

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Published On :29 ஜூலை 2026, 5:56 am IST

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையமும், ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்துப் பேசினாா். இதில், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தவறான பயன்பாட்டால் உடல்நலக் கோளாறு , சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தாா். அதே போல, ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவன மேலாளா் ராஜேஷ் கண்ணன், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லூநா்கள் ராஜாராமன், காா்த்திக் பாண்டி ஆகியோா் பூச்சிக் கொல்லி பாதுகாப்பு விளக்க கையேடுகளை வழங்கி விழிப்புணா்வு அளித்தனா். தொடா்ந்து, 150 விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தொழில் நுட்ப வல்லூநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.