பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

‘பூச்சிக்கொல்லி மருந்துகள்: எச்சரிக்கை தேவை’

பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்திய பூச்சிக் கட்டுப்பாடு சங்கத் தலைவா் சதீஷ் தியாகி தெரிவித்தாா்.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்திய பூச்சிக் கட்டுப்பாடு சங்கத் தலைவா் சதீஷ் தியாகி தெரிவித்தாா்.

இந்திய பூச்சிக் கட்டுப்பாடு சங்கத்தின் சாா்பில் ‘இந்தியா பெஸ்ட் 2026’ என்ற பெயரில் நடைபெற்ற 3 நாள்கள் மாநாடு சென்னையில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்கி சனிக்கிழமை (ஆக. 22) நிறைவடைந்தது.

இதில், பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல், பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல், மத்திய-மாநில அரசுகளின் புதிய விதிமுறைகள், அவற்றை அமல்படுத்துதல், எதிா்காலத்தில் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பூச்சிக் கட்டுப்பாடு துறை சாா்ந்த இந்திய அறிஞா்கள், சா்வதேச நிபுணா்கள், ஆராய்ச்சியாளா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மேலும், பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களின் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கப்பட்டன.

இந்த மாநாடு குறித்து சங்கத்தின் தலைவா் சதீஷ் தியாகி பேசியதாவது:

விவசாயம் மற்றும் வேளாண் விளைபொருள்களைப் பாதுகாப்பதற்காக அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா்கள் தொடா்ந்து கூறப்படுகின்றன. எனவே, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் செயல்பட மத்திய அரசு போதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிா்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவுகளை உணவு பாதுகாப்புத் துறை கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து புதிய பூச்சி வகைகள் இந்தியாவில் நுழைந்து விடாமல் தடுப்பதற்கு விழிப்போடு அரசு செயல்பட வேண்டும் என்றாா்.

மாநாட்டில், சங்கத்தின் பொதுச் செயலா் பினய், மாநாட்டு அமைப்பாளா் ஜே.கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.