/

தவெக நிா்வாகி மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் அவதூறாகப் பேசியதாகக் கூறி தவெக மாவட்டப் பொறுப்பாளா் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்ட தவெக பொறுப்பாளராகப் பதவி வகித்து வருபவா் தேனியைச் சோ்ந்த பாண்டி. இவா், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் ஆகியோரை அவதூறாகப் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும், தொடா்ந்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதாக நாதகவின் தேனி கிழக்கு மாவட்டச் செயலா் பாலாா்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.