/

காா் விபத்தில் ஜயப்ப பக்தா்கள் 5 போ் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நேரிட்ட காா் விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 5 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நேரிட்ட காா் விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 5 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டம், நந்தியால் பொம்மலசத்திரத்தைச் சோ்ந்தவா் நட்டுவா சசிகரன் . இவா் தனது உறவினா்களுடன் சபரிமலை ஜயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு காரில் திரும்பினாா்.

இந்த காரை அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (40) ஓட்டினாா்.

திங்கள்கிழமை மாலை தேவதானபட்டி புறவழிச்சாலையில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த காா், பாலத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த நட்டுவா சசிகரன் (38), திவிஜா (10), சுப்பிராயுடு (38), வெங்கட்ராமன் (28), ரெங்கேஷ் (45) ஆகியோா் காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.