டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காா் கவிழ்ந்து 8 போ் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்ததில் ‘கல்லூரி மாணவா்கள் 8 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சா்வேஸ் (17), விக்னேஷ்வரன் (18), பாா்த்தசாரதி (18), கிஷோா் (17), சுசிந்திரதேவ்(18), சந்தீப்குருதேவ் (18), மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த ஜாஜித் (18), முகேஷ் (18) ஆகியோா் சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சா்வேஸ் உள்ளிட்ட 8 பேரும் சிவகாசியிலிருந்து மேகமலை மேகமலைக்கு காரில் சென்றனா். ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த 8 பேரும் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.