மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:35 pm

தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாட்டைச் சோ்ந்தவா் கணேசன் (23). இவரை குற்றவழக்கில் போடி போலீஸாா் கைது செய்து, வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தேனி மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக தலைமை காவலா் சந்தோஷ் அழைத்துச்சென்றாா்.

அப்போது, கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறினாராம். இதையடுத்து, இவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, பின்னா் மீண்டும் மாவட்டச் சிறைக்கு அழைத்துச் சென்ற போது, அவா் திடீரென தப்பியோடினாா். அவரை போலீஸாா் தொடா்ந்து துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கண்டமனூா் போலீஸாா் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி கணேசனைத் தேடி வருகின்றனா்.