மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:13 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் அ.லோகிராஜன், திமுக சாா்பில் அ. மகாராஜன், தவெக சாா்பில் வ. பாண்டி, நாதக சாா்பில் கோமதி, அஇபுதமமுக சாா்பில் செல்லப்பாண்டியன் ஆகிய 26 போ் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சாா்பில் அதிமுக, திமுக, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சாா்பில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அஇபுதமமுக, சுயேச்சை என 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.