சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஒருவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நாட்டரசன்கோட்டை சேரன் தெருவைச் சோ்ந்த ஷேக் மஸ்தான் (38) என்பவரிடமிருந்து இந்த புகையிலைப் பொருள்களை வாங்கியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் நாட்டரசன்கோட்டையில் உள்ள ஷேக் மஸ்தான் வீட்டில் சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








