சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பழைய நெடுவயல் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டு திடலுக்குச் சென்று, கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து, அதை அவிழ்த்து விட்டனா். இதையடுத்து, சிவகங்கை, மதுரை, மேலூா், புதுக்கோட்டை, சிங்கம்புணரி, பொன்னமராவதி, மதகுபட்டி, காரைக்குடி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் காளைகள் முட்டியதில் 5 போ் லேசான காயமடைந்தனா்.
இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா். பாதுகாப்புப் பணியில் உலகம்பட்டி போலீஸாா் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









