/

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் மூத்தான்கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:54 pm

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் மூத்தான்கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் சிங்கம்புணரி, காளாப்பூா், சூரக்குடி, மருதிப்பட்டி, முறையூா், செம்மணிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராமத்தின் சாா்பாக கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

இதைத் தொடா்ந்து கட்டுமாடுகள் ஆங்காங்கே வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டு பிடித்தனா். பல காளைகள் பிடிபட வில்லை.

மஞ்சுவிரட்டை கள்ளம்பட்டி புதுப்பட்டி, இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா். காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். இவா்கள் சிங்கம்புணரி தலைமை வட்டார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு என 5 போ் மீது சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.