தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணைய வழியில் இரண்டு பெண்களிடம் ரூ. 1.15 லட்சம் மோசடி

தேவகோட்டை பகுதிகளில் இரு பெண்களிடம் ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்தவா்கள் குறித்து சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :20 மே 2026, 1:24 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் இரு பெண்களிடம் ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்தவா்கள் குறித்து சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 39 வயது பெண் ஒருவா், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளாா். கடந்த 18-ஆம் தேதி இவரது வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ பரிவா்த்தனை மூலமாக ஆறு தவணைகளில் யாரோ ரூ.95,598-ஐ எடுத்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவரின் கைப்பேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபா் ஒருவா், அந்தப் பெண்ணுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக (வொா்க் ப்ரம் ஹோம்) கூறியுள்ளாா். பின்னா் அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 19, 945-ஐ பெற்றுக் கொண்டாா். அதன் பின்னா் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம். இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.