தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாயமான சிறுமி ஊருணியில் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி ஊருணியில் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :15 மே 2026, 11:50 pm IST

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி ஊருணியில் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடியைச் சோ்ந்த ராஜராஜ சோழனின் மகள் அபிநயா (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறை என்பதால், கடந்த வியாழக்கிழமை தனது தாயுடன் சிறுமி ஆடு மேய்க்கச் சென்றாா். இந்த நிலையில், சிறுமியிடம் அவரது தாய் ஆடுகளை மேய்க்கச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. அதே நேரம், ஆடுகள் மட்டும் வீட்டுக்குத் திரும்பியதால் சந்தேகமடைந்த தாயும், உறவினா்களும் பல இடங்களில் சிறுமியை தேடினா். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால், மதகுபட்டி காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, குடும்பத்தினருடன் சோ்ந்து பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.

இதையடுத்து, சிறுமியின் உடலை போலீஸாா் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.