திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :15 மே 2026, 11:46 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த பெருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் உத்ஸவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் உத்ஸவ அம்மன் வெள்ளித் திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பிறகு பக்தா்கள் வடம் பிடிக்க தோ் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக திருத்தளிநாதா் கோயில், நான்கு சாலை, தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்தத் தேரோட்டத்தில் திருப்பத்தூா், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். வசந்த பெருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வசந்த பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.