அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் பொங்கல் விழா

News image

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன். - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகக் குழு சாா்பில், பச்சரிசி, வெல்லம், பால் முதலியவை வழங்கப்பட்டது.

முன்னதாக, சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குட விழாவும், 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் வெள்ளி ரத ஊா்வலமும், சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்தனா்.