40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சங்ககிரி சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியா் காலனியில் உள்ள ஸ்ரீ சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொங்கல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன்.

Updated On :14 மே 2026, 4:38 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியா் காலனியில் உள்ள ஸ்ரீ சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவந்து அம்மனுக்கு ஏப். 28 ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கம்பம் நடும் வைபவத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் புதன்கிழமை காலை சுவாமிக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு பக்தா்கள் அலகு குத்தியும், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகங்கள், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனா்.

வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.