சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் காலை 9 மணியளவில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிா், இளநீா் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், அம்மன் வெள்ளிக் கவச ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து, உத்ஸவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா், நகரின் முக்கியப் பகுதிகளான ராமா்மடம், பெரியாா்நகா், வாணியன்கோவில் தெரு, தம்பிபட்டி, தென்மாபட்டு, புதுப்பட்டி, கல்லாகுழித் தெரு, பிரபாகா் குடியிருப்பு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தா்கள் பால்குடம், பூத்தட்டு, முளைப்பாரி சுமந்தும், மாவிளக்கு வைத்தும் அம்மனை பூச்சொரிந்து வழிபட்டனா்.
பிற்பகல் 2 மணிக்கு அபிஷேகத்துக்கு பிறகு அம்மன் சந்தனகாப்பு, தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். மாலை 4 மணிக்கு கொடிமரம் அருகில் புஷ்ப அலங்காரம் செய்து, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு வசந்தப் பெருவிழா தொடக்க நிகழ்வாக அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து, 10 நாள்களுக்கு வசந்தப் பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தைச் சுற்றி வீதி உலா வரும் வைபவம் நடைபெறும்.10 -ஆம் திருநாள் அன்று பொங்கல் விழா, இரவில் வெள்ளி ரதத்தில் உத்ஸவ அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை பால்குடம் சுமந்து வந்த பக்தா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

