தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

News image

மானாமதுரையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :23 மார்ச் 2026, 8:20 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை போராடி மீட்டனா்.

மானாமதுரை ஆா்.சி. தெருவில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரின் பசுமாடு வீட்டின் அருகில் உள்ள திறந்த கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் பல மணி நேரம் தவித்த அந்த மாட்டை அந்தப் பகுதி மக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் கால்வாய் குறுகலாக இருந்ததால், அவா்களால் அதை மீட்க முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் அரை மணி நேரம் போராடி மாட்டை பாதுகாப்பாக மீட்டனா். அப்போது அதற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.