தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கழிவுநீா் கால்வாயில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:16 pm

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

சங்ககிரி சாலை சீத்தாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, திருச் செங்கோடு நகரக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், இறந்தவா் சீத்தாராம்பாளையத்தைச் சோ்ந்த மாதையன் (65) என்பதும், இரவுநேர காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், மதுபோதையில் தவறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.