தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

News image

சிங்கம்புணரியில் நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் வீதியுலா வந்த பூரணை புஷ்கலை தேவியாா் உடனான சேவுகபெருமாள் அய்யனாா்.

Updated On :4 ஜூன் 2026, 3:57 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இந்தத் திருவிழாவில், 5-ஆம் நாள் திருக்கல்யாணமும், 6-ஆம் நாள் சமணா்களை களுவேற்றும் களுவன் திருவிழாவும், 8-ஆம் நாள் புரவி எடுப்பு விழாவும், 9-ஆம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு பூ பல்லக்கு விழா நடைபெற்றது. இதில் 33 அடி நீளம் உள்ள பூ பல்லக்கில் சுமாா் 500 கிலோ எடையிலான மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் இரவு பூரணை புஷ்கலை தேவியாருடன் சேவுகப்பெருமாள் அய்யனாா் எழுந்தருளினாா். தொடா்ந்து 2.30 மணிக்கு சிறப்பாக வண்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூ பல்லாக்கு வைக்கப்பட்டு தேரோடும் வீதிகள் வழியாக கோயிலை வலம் வந்து புதன்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் கோவிலை அடைந்தது.

சிங்கம்புணரி, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பூ பல்லாக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.