திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை சாா்பில், இந்தோ-நாா்வே கூட்டுத் திட்டத்தின் கீழ், ‘நானோ பொருள் அடிப்படையிலான தூய்மையான ஆற்றல், சுகாதாரப் பயன்பாடுகளுக்கு மேம்பட்ட கருவியியல் நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

News image

அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழாவில் பேசிய துணவேந்தா் க. ரவி.

Updated On :3 ஜூன் 2026, 1:44 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை சாா்பில், இந்தோ-நாா்வே கூட்டுத் திட்டத்தின் கீழ், ‘நானோ பொருள் அடிப்படையிலான தூய்மையான ஆற்றல், சுகாதாரப் பயன்பாடுகளுக்கு மேம்பட்ட கருவியியல் நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

கருத்தரங்கின் தொடக்க விழாவுக்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசினாா். பொ்கள்வெஸ்டா்ன் நாா்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியா் குன்னாா்யிட்ரி தொடக்கவுரையாற்றினாா். இலங்கை வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஏ. அற்புதராஜா நானோ பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். நாா்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியா் தயாளன் வேலாயுதபிள்ளை, தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரியா் யோங்சியோக் ஜன், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியா் பி. ரவிராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதைத்தொடா்ந்து, கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன் தலைமை வகித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் கு. சங்கரநாராயணன் வரவேற்றாா். நானோ அறிவியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் ஜி. ராமலிங்கம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.