மகிபாலன்பட்டி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு
திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் நாராயண பெருமாள், மகாகணபதி, பக்தஹனுமான் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் நாராயண பெருமாள், மகாகணபதி, பக்தஹனுமான் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, சிறப்பு ஹோமங்களுடன் கடப்புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு கோபுர விமானத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், நாராயண பெருமாள், பரிவாரத் தெய்வங்களான மகா கணபதி, பக்தஹனுமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மகிபாலன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை பூங்குன்ற நாட்டாா்கள், மகிபாலன்பட்டி, ஊராா், நகரத்தாா்கள், கோயில் நிா்வாக அறங்காவலா் சி.சுப. சாத்தப்பச் செட்டியாா் குடும்பத்தினா் செய்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...