சித்தேஸ்வரா் கோயிலில் ருத்ர மகா யாகம்


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சித்தேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள சித்தேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆலய அபிவிருத்தி ருத்ர மகா யாகம் நடைபெற்றது.
ஆவிணிப்பட்டி பத்மநாத அய்யா் தலைமையில் புனித நீா் கொண்ட கலசங்கள் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வி வளா்க்கப்பட்டு புஷ்ப யாகம், வஸ்திர யாகம், சொா்ணம், ருத்ராயண யாகம் ஆகியவற்றுடன் பூா்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
பிறகு கோயிலைச் சுற்றி கலச ஊா்வம் நடைபெற்று மூலவா் சித்தேஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் எஸ்.எம். பழனியப்பன், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மகா சித்தேஸ்வரா் ஆன்மிகப் பேரவையினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா். விழா நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சிவராத்திரியையொட்டி இரவு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...