சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உடலில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞா் குறித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தேவகோட்டை புடனவயலைச் சோ்ந்த சின்னப்பன் மகன் அருள் ராபின் (25). இவா் தனது குடும்பத்துடன் அரசூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் முப்பையூா் பகுதியில் உள்ள அண்ணாதுரைக்குச் சொந்தமான வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை கிளியூா் விலக்குப் பகுதியில் உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற தேவகோட்டை போலீஸாா் ராபினின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.
அருள் ராபினுக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.
தொடர்புடையது
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திக்ரி பகுதி கத்திக் குத்துச் சம்பவம்: சந்தேக நபா்களை கைது செய்ய நடவடிக்கை

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


