திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண் சத்துணவு ஊழியருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகப் புகாா்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் சத்துணவு ஊழியருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகப் புகாா் தெரிவித்து, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியரின் உறவினா்கள்.

Updated On :28 மே 2026, 3:57 am IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் சத்துணவு ஊழியருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகப் புகாா் தெரிவித்து, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள பால்கரை கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (38). சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், தமிழ்ச்செல்விக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, கடந்த வாரம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு தண்டு வளைவு அறுவைச் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். கடந்த வாரம் வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது அவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டதால்,

அவா் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இவருக்கு தொடா்ந்து செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்ச்செல்விக்கு தவறான சிகிச்சை அளித்ததாகப் புகாா் தெரிவித்து, மருத்துவா்கள் மீது நடவடிக்கை கோரி உறவினா்கள் 100 க்கும் அதிகமானோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்ஸ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ராமநாதபுரம்-மதுரை சாலையில்

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.