திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

News image

கமுதி சுந்தராபுரத்தில் தனியாா் பள்ளி எதிரே சாலையில் பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

Updated On :16 மே 2026, 12:02 am IST

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கமுதி- சாயல்குடி பிரதான சாலையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிறது. பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். விடுமுறை நாள்கள் நிறைவடைந்து மாணவா்கள் பள்ளிக்கு திரும்பும் போது இதே நிலை நீடித்தால் துா்நாற்றத்தால் அவா்களும் பாதிக்கப்படுவா். அத்துடன் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோா்கள் அச்சம் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகமும், கமுதி பேரூராட்சி நிா்வாகமும் தலையிட்டு சாலையில் கழிவுநீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.