திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேருக்கு மே 20 வரை நீதிமன்றக் காவல்

ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீா்கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 5:06 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீா்கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அலெக்ஸ் (23), அந்தோணிராஜன் (44), சாந்தன் அலெக்ஸியா (52), அருள்பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வ கானு (26) ஆகிய 6 பேரும் ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் தெற்கு மீன்பிடி தளத்தில் தங்கி, நாட்டுப் படகில் தூண்டிலைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை மன்னாா் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த 6 மீனவா்களையும் கைது செய்து, நீா்கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீா்கொழும்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, 6 மீனவா்களையும் வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.