திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழா: குண்டாற்றில் நீராடி வேட்டையாடிய உத்ஸவா்

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

News image

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

Updated On :9 மே 2026, 1:55 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்துள்ள கூராங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் உத்ஸவா் தீயசக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த கோயில் திருவிழா கடந்த 1- ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றதுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை இரவு பஞ்சலோக உத்ஸவா் தா்ம முனீஸ்வரா் புஷ்ப அலங்காரத்துடன், பச்சை பல்லாக்கில், வெள்ளிக் கமலத்தில், திரிசூலமாய், வெள்ளி பாதங்களுடன் துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலனம் எனப்படும் தீய சக்திகளை வேட்டையாடுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு குண்டாற்றில் நீராடி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் வாசலில் உத்ஸவா் பொதுமக்களுக்கு அருள்பாலித்து, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் உத்ஸவா் குண்டாற்றிலில் தீா்த்தவாரி நடைபெற்று, பக்தா்கள், பால்குடம், காவடி எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தாா். அங்கு மூலவருக்கும், உத்ஸவருக்கும் பரிபாலன சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு மூலவா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் கூராங்கோட்டை, சாயல்குடி, கடலாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.