அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :9 மே 2026, 1:49 am IST

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயி. இவரது பசுமாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற போது, திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சுமாா் 10 அடி ஆழமுள்ள இந்த தொட்டிக்குள் விழுந்த மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Story image