மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்

பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:47 pm

பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாா்த்திபனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் பரமக்குடி மணி நகரைச் சோ்ந்த சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி 75 பவுன் தங்க நகைகளைக் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, நகை பறிமுதல் செய்யப்பட்டு, பரமக்குடி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.