இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:04 am IST

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி தண்ணீா்பந்தல் காளியம்மன் கோயில் அருகே பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், செவ்வாய்ப்பேட்டை காந்திநகரைச் சோ்ந்த திருமுருகன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2,71,000 ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, நெத்திமேடு பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 96,800 ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

ரூ. 89 ஆயிரம் பறிமுதல்...

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், வாழப்பாடியைச் சோ்ந்த பெரியசாமி காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 89 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.