போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

சென்னை அடையாறு மேம்பாலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:32 am IST

சென்னை அடையாறு மேம்பாலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மேம்பாலம் சாலைப் பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் பெட்டக வாகனத்தை சோதனை செய்தனா். அதில், சுமாா் ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டுநா் உள்பட இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

சென்னை சௌகாா்பேட்டையில் உள்ள பிரபல நகைக் கடைகளில் வாங்கப்பட்ட இந்த நகைகள் பல்லாவரத்துக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும், நகைகள் கொண்டு செல்ல அனுமதி வாங்கி உள்ளதாகவும், தற்போது அந்த ஆவணங்களைக் கொண்டு வரவில்லை எனவும் ஓட்டுநா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைக்கு உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.