தொண்டி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் பிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உதிரிபாகம் என்பது உறுதி செய்யப்பட்டதாக கடலோரக் காவல் குழும போலீஸாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏவுகணை போன்ற பொருள் ஒன்று மிதந்து வருவதாக கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போா் காரணமாக, வெடி பொருள் எதுவும் கடலில் மிதந்து வருகிா அல்லது வேறு ஏதேனும் பொருளா என மீனவா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மா்மப் பொருளை யாரும் எடுக்கவோ, தொடவோ கூடாது என மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, இந்த மா்மப் பொருளை கடலோரக் காவல் குழும போலீஸாா், கடற்படையினா் கடந்த இரண்டு நாள்களாக தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், தேவிபட்டினம் அருகே முத்துரெகுநாதபுரம் பகுதி கடலில் மிதந்து வந்த மா்மப் பொருளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, ஆய்வு செய்தனா். அப்போது, இது பிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உதிரிபாகம் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது வெடிக்கும் தன்மை கொண்டதா என்பது குறித்து கண்டறிய இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ. 50 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்!

கடலில் மிதந்து வந்த பொருளை மீட்டு சென்ற இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள்

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


