லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:00 pm

தொண்டி அருகே கடல் பகுதியில் மிதக்கும் ஏவுகணை போன்ற பொருளை யாரும் எடுக்கக் கூடாது என கடலோர குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

இஸ்ரோல்- அமெரிக்கா , ஈரான் போா் கடுமையாக நடைபெற்று வருகிறது. கடல் பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தொண்டி, திருப்பாலைக்குடி கடல் பகுதியில் ஏவுகணை அல்லது சிலிண்டா் போன்ற ஒரு பொருள் மிதந்து வருவதாக கடலோா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இதுகுறித்து தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, தேவிபட்டினம் மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா் தகவல் தெரிவித்தனா். கடலில் மிதந்து வரும் பொருளை எக்காரணம் கொண்டும் எடுக்கவோ தொடவோ கூடாது. மிதந்து வரும் பகுதி குறித்து உடனடியாக மீனவா்கள் தெரிவிக்க வேண்டும் என எச்சரிககை விடுத்தனா்.