சாயல்குடி அருகே தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பூவேந்தியநாதா் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலபைரவருக்கு சந்தனம், விபூதி, பால், பன்னீா், மஞ்சள் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் சாயல்குடி, கடலாடி, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிா்வாகத்தினா், கோயில் விசாரனைதாரா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்தனா்.
தொடர்புடையது

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு வழிபாடு

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


