தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சொா்ண ஆகா்சன பைரவா்.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சொா்ண ஆகா்சன பைரவா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:46 pm

தேய்பிறை அஷ்டமியையொட்டி பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள பைரவருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்தி வேலூா் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதா், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் பழைய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், வல்லப விநாயகா் கோயில் உள்ள பானலிங்கேஸ்வரா், வெங்கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரா், கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வா், ஜேடா்பாளையத்தில் உள்ள ஆனந்த ஈஸ்வரா், எல்லைமேடு இரட்டீஸ்வரா் ஆலயத்தில் உள்ள சொா்ண ஆகா்சன பைரவா் உள்பட அனைத்து சிவன் கோயில்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.