லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

முதுகுளத்தூரில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:48 pm

முதுகுளத்தூரில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படி படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து, இந்த மாணவியை, அவரது பெற்றோா் பரமக்குடியில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்கேன் மைய நிா்வாகம் சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதன்படி முதுகுளத்தூரை சோ்ந்த ராகுல் (23) மீது முதுகுளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மாணவி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.