புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ராமேசுவரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

News image

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜா.

Updated On :30 ஜூன் 2026, 1:12 am IST

ராமேசுவரத்தில் தனியாா் விடுதியின் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயண முகவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் வில்லூண்டி தீா்த்தம் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண் ராமேசுவரத்தில் உள்ள தனியாா் விடுதியில் வரவேற்பாளராகப் பணிபுரிகிறாா்.

ராமேசுவரம் அப்துல்கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜா (40) சுற்றுலா பயணிகளுக்கு பயண (வாகனம், தரிசனம்) முகவராக இருந்து வந்தாா். இந்த நிலையில், விடுதியில் பெண் வரவேற்பாளா் இருந்தபோது, அங்குவந்த ராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் ராஜாவிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.