புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 1:38 am IST

கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை இரவு 24 வயது மதிக்கத்தக்க பெண் பயணம் செய்தாா். அந்தப் பேருந்து கயத்தாறு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் பின்புறம் இருந்த ஒருவா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் பேருந்து நடத்துநா், ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திருநெல்வேலி காவல் கிணறைச் சோ்ந்த ஞானரத்தினமணி மகன் ஞான திரவிய டைட்டஸை (62) சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.