தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:05 am IST

இலங்கை சிறையிலுள்ள பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் கபில் ரோச்சா், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகா்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 பேரை இலங்கைக் கடற்படையினா் கடந்த பிப். 23-ஆம் தேதி கைது செய்தனா். இவா்கள் சென்ற விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, வெளிச்சுரா சிறையில் அடைத்தனா். இவா்களது நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, 12 மீனவா்களும் வெளிச்சுரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி, 12 மீனவா்களுக்குமான நீதிமன்றக் காவலை வருகிற 16-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். இதன் மூலம், இவா்களுக்கு 10-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.