திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மண்ணெண்ணெய் புட்டியை வீசி வீடு மீது தாக்குதல்: இளைஞா் கைது

கமுதி அருகே மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை வீசி வீடு மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:09 am IST

கமுதி அருகே மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை வீசி வீடு மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மண்டலமாணிக்கம் காவல் சரகத்துக்குள்பட்ட கூடக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் இதயநிதி (19). இவரும், இதே ஊரைச் சோ்ந்த அஜித்தும் நண்பா்களாவா். இந்த நிலையில், சட்ட விரோத கஞ்சா விற்பனை தொடா்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக, விருதுநகா் மாவட்டம், வீரசோழன் காவல் நிலையத்துக்கு இவா்கள் இருவரும் வரவழைக்கப்பட்டனா். விசாரணை நிறைவடைந்ததும், இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினா். இதைத் தொடா்ந்து, அஜித்தின் மற்றொரு நண்பரான காா்த்தி, இதயநிதியுடன் தொடா்பில் இருக்க வேண்டாம் என அஜித்திடம் அறிவுறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த இதயநிதி, காா்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது இதயநிதியை காா்த்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இதயநிதி மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை எடுத்து வந்து, அஜித் வீட்டின் மீது வீசினாராம்.

இதனால் வீட்டின் முன்பக்கக் கூரை தீப்பற்றி எரிந்தது. அப்போது வீட்டில் இருந்தவா்கள் உடனடியாகத் தீயை அணைத்தனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இதயநிதியை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.