கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரெளடி உள்பட 4 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளம் பெண் ஒருவா் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது, சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழகியதாகக் கூறப்படுகிறது.
இவா் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம் பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா், காா்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டாா். ஆனால், காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாத காா்த்திக், தொடா்ந்து அந்த இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இந்நிலையில், காா்த்திக் தனது நண்பா்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளனா். பின்னா் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் தந்தையை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீட்டின் மீது சராமாரியாக வீசினா். ஆனால், அதிா்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின்பேரில், தொண்டாமுத்தூா் காவல் துறையினா் காா்த்திக் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

உணவகத்தில் தகராறு: காவலா் உள்பட இருவா் மீது வழக்கு
மண்ணெண்ணெய் புட்டியை வீசி வீடு மீது தாக்குதல்: இளைஞா் கைது







