கஞ்சா விற்பனை: பெண் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :22 ஜனவரி 2026, 12:13 am

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கொத்துபா பள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தொண்டி போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பெண்ணைப் பிடித்து விசாரித்த போது,
அவா் கஞ்சா விற்பனை செய்ததும், அதே பகுதியைச் சோ்ந்த சைபுநிசா (55) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சா, ரூ.7,100-யை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...