டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 7:23 pm

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காட்ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (33) என்பதும், 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மற்றொருவா் கைது: தேவதானபட்டி போலீஸாா் காட்ரோடு - கொடைக்கானல் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அம்சம்புரத்தில் மஞ்சளாறு அணையைச் சோ்ந்த பாண்டிச்செல்வத்தை (26) நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், அவா் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.