டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தொண்டி அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி கூடலூரைச் சோ்ந்தவா் குருமூா்த்தி (26). இவா், தொண்டி பகுதியில் உள்ள நெல் அறுவை ஆலையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தொண்டி அருகேயுள்ள சம்பை பகுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி பாலத்தில் மோதியதில் குருமூா்த்தி பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.