சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜே. ஆலம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது:
சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் தெரிவித்தாா். ஆனால், இதுவரை அந்த ரயில் சேவை தொடங்கப்படவில்லை. ஆனால், இதற்கு பிறகு அறிவித்த பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
தென் தமிழகத்தில் ராமேசுவரத்துக்கு வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்தும் இன்னும் இயக்கப்படாமல் காலதாமதம் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதி மக்கள் பகலில் சென்னை சென்று வரும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என கால அட்டவனை வெளியானது.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட மக்களும், வெளிமாநிலப் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில், உடனடியாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

எரிபொருள் நெருக்கடி: வந்தே பாரத் ரயிலில் சென்ற மகாராஷ்டிர முதல்வர்!

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



